மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை புதிய ஆலய அர்ப்பண விழா நாளை நடக்கிறது.
மாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா
பதிவு: நவம்பர் 28, 2020 13:14
கிறிஸ்துவ வழிபாடு
மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை சார்பில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. இதன் அர்ப்பண விழா மற்றும் 45-வது சபை நாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு நடக்கிறது. மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தங்கையா தலைமை தாங்குகிறார். சபை போதகர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்துகொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணித்து வைத்து ஆசியுரை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் ஆதீன மாமன்ற உறுப்பினர் ஜெயசிங் வரவேற்று பேசுகிறார். சபைச் செயலாளர் பிராங்கிளின் ஜோஸ் அறிக்கை படிக்கிறார். பொருளாளர் மற்றும் கட்டிட குழு கன்வீனர் ராஜரத்தினம் ஆலய கட்டிட அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
விழாவில் பேராய தலைவர்கள், முன்னாள் போதகர்கள், திருப்பணியாளர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு சிறப்பு நன்றி பிரார்த்தனை நடக்கிறது. இதில் போதகர் அருள்தாஸ் சிறப்பு செய்தி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சபை போதகர் விஜயகுமார் தலைமையில் கட்டிட குழுவினர், சபை மக்கள் செய்துள்ளனர்.