ஆன்மிகம்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா தொடங்கியது

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-08-30 03:51 GMT   |   Update On 2019-08-30 03:51 GMT
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் திருவிழா நேற்று மாலை கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
சின்ன வேளாங்கண்ணி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழக அளவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

மாதாவை வழிபடும் கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் வேளாங்கண்ணிக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருப்பது பெசன்ட் நகர் மாதா கோயில். பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர்.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான மாதா கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Tags:    

Similar News