ஆன்மிகம்
புனித வளனார் நற்கருணை பெருவிழா பவனி

புனித வளனார் பேராலயம் சார்பில் நற்கருணை பெருவிழா பவனி

Published On 2019-07-08 04:15 GMT   |   Update On 2019-07-08 04:15 GMT
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நடந்தது.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, பவனி, நற்கருணை ஆசீர் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை, மதுரை மாநில சேசு சபை தலைவரின் உதவியாளர் தேவதாஸ், பாதிரியார்கள் இணைந்து நிறைவேற்றினர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து நற்கருணை பவனி தொடங்கியது. இதில் மாரம்பாடி வட்டார அதிபர் அமலதாஸ் நற்கருணையை ஏந்தி வர அண்ணா சிலை, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வழியாக பவனி பேராலயத்தை அடைந்தது. அங்கு, திண்டுக்கல் குமரன் திருநகர் பங்குத்தந்தை ஸ்டீபன் கஸ்பார் மறையுரை ஆற்றினார். அதன்பிறகு அனைவருக்கும் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பாதிரியார்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News