ஆன்மிகம்

கடலூர் சொரக்கல்பட்டு அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2019-06-15 03:15 GMT   |   Update On 2019-06-15 03:15 GMT
கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முதல்வரும், அருட்தந்தையுமான ஆக்னல் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது.

அதன்பிறகு கோவில்தெரு, பாரதி சாலை, பீச்ரோடு, கான்வென்ட் சாலை போன்ற முக்கிய சாலைகள் வழியாக தேர் பவனி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News