ஆன்மிகம்

மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2018-12-31 03:34 GMT   |   Update On 2018-12-31 03:34 GMT
மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக புதியதாக ரூ.12 லட்சத்தில் முற்றிலும் பளிங்கு கற்கலால் ஆன 65 அடி உயரத்தில் கொடி மரமும், அதன் உச்சியில் குழந்தை ஏசு உருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பளிங்கு கற்களை வியட்நாமில் இருந்து கொண்டுவரப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து செதுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று ஆலயத்தில் நிறுவப்பட்டது.

கொடி மரத்தை தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் பிரதிஷ்டை செய்து வைத்து, கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு தந்தை தாமஸ் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News