ஆன்மிகம்

வானுவம்பேட்டை புனித யூதாததேயு ஆலய 41-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றம்

Published On 2018-10-25 07:59 GMT   |   Update On 2018-10-25 07:59 GMT
ஆலந்தூரை அடுத்த வானுவம்பேட்டையில் புனித யூதாததேயு ஆலயத்தின் 41ம் ஆண்டு விழா, இன்று மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆலந்தூரை அடுத்த வானுவம்பேட்டையில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்திருக்கிறது. யூதா ததேயு ஆலயத்தின் 41ம் ஆண்டு விழா, இன்று மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றப்படுகிறது.

இதில் கொடி பவனி மற்றும் திருப்பலி நடக்கின்றன. ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். 26-ந்தேதி மாலை 5.30 மணி நற்கருணை பெருவிழா நடக்கிறது. இதில் அருட்தந்தை டேனியல் தயாபரன் பங்கேற்கிறார். 27-ந்தேதி மாலை 6.30 ஆடம்பர திருத்தேர் திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதில் செங்கல்பட்டு மறைமாவட்டம் ‘ஆயரின் பதில் குரு’ பாக்கிய ரெஜிஸ் பங்கேற்கிறார். 28-ந்தேதி காலை 8 மணிக்கு புனித யூதாததேயு பெருவிழா நடக்கிறது. இதில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு ஆங்கிலத்தில் பிரார்த்தனை நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி கூட்டம் நடக்கிறது. பின்னர் கொடியிறக்கப்படுகிறது. இதில் தாம்பரம் உதவி பங்குத்தந்தை ரவி ஜோசப், பல்லாவரம் உதவி பங்குத்தந்தை விக்டர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

யூதாததேயு கி.பி. முதலாம் நூற்றாண் டில் முதலாம் முற்பகுதியில் கலிலேயாவில் பிறந்தவர். பெற்றோ யாக்கோபுமேரி. யூதா ததேயு இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இயேசுவின் நெருங்கிய உறவினரும் ஆவார். யூதா ததேயு எனும் பெயர் இதயம் என்பதின் பொருளாகும்.

இவர் நற்செய்தி பணியும், நோய் பிணியில் இருந்து குணமளிக்கும் வல்லமையும் கொண்டவர். திருமுகமும் எழுதியிருக்கிறார். கைவிடப் பட்டோரின் பாதுகாவலர், நம்பிக்கை இழந்தோருக்கு நம்பிக்கை அளிப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

வானுவம்பேட்டையில் உள்ள யூதா ததேயு ஆலயத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன வசதி, தொழில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம், அயல்நாட்டு வேலை போன்ற பல நன்மைகளை வேண்டி ஏராளமானோர் வருகின்றனர். ஜெபித்து பயனடைந்து

இந்த ஆலயத்துக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஜெபித்து செல்கின்றனர். இதனை ஆயர் பேரவை அனுமதியுடன் திருத்தலமாக அருட்பொழிவு செய்யும் நாள் விரைவில் வரும் என ஆயர் நீதிநாதன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News