கிரிக்கெட்

நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் அதிரடி: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்

Update: 2022-06-24 17:22 GMT
  • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
  • நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நெல்லையில் இன்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்னேஷ் 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நிஷாந்த் 25 ரன்கள், மோனிஷ் 24 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

துவக்க வீரர்கள் அமித் சாத்விக் 20 ரன்களும், முரளி விஜய் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த பின்னர், நிதிஷ் ராஜகோபால், ஆதித்ய கணேஷ் இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர். நிதிஷ் ராஜகோபால் ஆட்டமிழக்காமல் 64 ரன்களும், ஆதித்ய கணேஷ் ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் விளாச, திருச்சி அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

Similar News