கிரிக்கெட் (Cricket)
null

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதிய கடைசி டெஸ்ட் 'டிரா': தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Published On 2023-01-08 18:03 IST   |   Update On 2023-01-08 18:03:00 IST
  • ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசல்வுட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும், டிரெவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
  • முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 195 ரன்னும், ஸ்டீவ் சுமித் 104 ரன்னும் எடுத்தனர். மழையால் 3-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருந்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 108 ஓவர்களில் 255 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 220 ரன் குறைவாகும்.

இதனால் தென் ஆப்பிரிக்கா 'பாலோ ஆன்' ஆனது. பாலோ ஆனை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா 275 ரன் எடுத்து இருக்க வேண்டும். 20 ரன் குறைவாக எடுத்ததால் பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது.

கேசவ் மதராஜ் அதிக பட்சமாக 53 ரன்னும், ஹார்பர் 47 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசல்வுட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும், டிரெவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

220 ரன்கள் பின்தங்கிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 41.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

Tags:    

Similar News