கிரிக்கெட்

சூர்ய குமார் யாதவ்

null

ஒரு சதம்...பல சாதனைகள்....சூர்ய குமார் யாதவுக்கு குவியும் பாராட்டுகள்

Published On 2022-07-11 11:35 GMT   |   Update On 2022-07-11 11:54 GMT
  • சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
  • சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சூர்ய குமாரின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். நான்காவது இடத்தில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூர்யகுமார் படைத்துள்ளார்.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Tags:    

Similar News