கிரிக்கெட்

ஜெர்சியை மாற்றிக் கொண்ட இந்தியா-ஜிம்பாப்வே இளம் வீரர்கள்: நெகிழ்ச்சியான தருணம்

Published On 2022-08-23 12:15 GMT   |   Update On 2022-08-23 12:15 GMT
  • நேற்றைய போட்டியில் எவன்ஸ் 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு போராடினார்.
  • ப்ராட் எவன்ஸ் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரைக் எவன்ஸ்-ன் மகன் ஆவார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இளம் வீரர்களுடன் இந்தியா 3 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த தொடரில் தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதேபோல் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதுக்கு முன் வெளிநாட்டில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் 22 வயதே ஆனாலும் இவ்வளவு திறமைகள் வாய்ந்த சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாக கூறியுள்ளார்.

நேற்றைய போட்டியில் எவன்ஸ் 5 விக்கெட்டுகளையும் 28 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு போராடினார்.

கில் குறித்து ப்ராட் எவன்ஸ் கூறியதாவது:-

கில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றினார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்பதாலேயே அவருடைய ஜெர்சியை பெற்று இன்று அவருக்கு எதிராக விளையாடியுள்ளேன். அவரை உலகத்தரம் வாய்ந்த வீரர் என முதல் போட்டியிலிருந்தே நீங்கள் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு ரன் எடுக்கும் போது அவர் நினைக்கும் இடத்தில் பந்தை அடித்து எடுக்கிறார். அதுபோன்ற நுணுக்கம் நீண்ட காலம் பயிற்சி எடுத்தால் தான் உங்களுக்கு கிடைக்கும். அவரின் ஆட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்த நான் அவருடைய ரசிகனானேன். அவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்ற போது டிவியில் பார்த்துள்ளேன். இன்று அவருக்கு எதிராக விளையாடியது சிறப்பானது.

இந்த போட்டி முடிந்த பின் அவருக்கு என்னுடைய ஜெர்சியை கொடுத்தேன். பதிலுக்கு அவர் தன்னுடைய ஜெர்ஸியை கழற்றி கொடுத்தார். அதை நான் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார்.

இவ்வாறு ஜிம்பாப்வே வீரர் கூறினார்.

முன்னாள் ஜிம்பாப்வே வீரர் கிரைக் எவன்ஸ் மகனான இவர் தன்னுடைய 25 வயதில் சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News