கிரிக்கெட்

சந்திரயான் -3 வெற்றி: நேரலையில் பார்த்த டோனி- வைரலாகும் வீடியோ

Published On 2023-08-24 06:50 GMT   |   Update On 2023-08-24 06:50 GMT
  • இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
  • விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. இந்த 'லேண்டர்', நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர்.

இறுதியில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஜிம்மில் இருந்த டிவியில் இந்த வீடியோ காட்சியை பார்த்து கைகளை தட்டி அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

இவர் மட்டுமல்லாமல் அவரது மகளாக ஷிவாவும் இந்த காட்சியை பார்த்து துல்லி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News