கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த உனத்கட்

Published On 2023-08-02 12:33 GMT   |   Update On 2023-08-02 12:33 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் உனத்கட் இடம் பிடித்தார்.
  • இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் அவர் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான 31 வயதாகும் ஜெயதேவ் உனத்கட், இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியதன் மூலம் அவர் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், 7 ஆண்டு 230 நாள்கள் கழித்து களமிறங்கியது தான் ஒருநாள் போட்டிகளில் அதிக இடைவெளி விட்டு விளையாடியதாக இருந்தது. அதாவது முதன் முதலில் 1989-ம் ஆண்டு விளையாடி ராபின் சிங் பின்னர் 1996-ல் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் கடைசியாக 2013-ம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியில் விளையாடினார். இதன் பின்னர் தற்போது 2023-ல் மீண்டும் விளையாடியுள்ளார்.

தனது கம்பேக் போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய உனத்கட் 16 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

Tags:    

Similar News