கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு 2-வது வெற்றி: நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
- ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
- டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.