காமன்வெல்த்-2022

தங்கம் வென்ற எல்தோஸ் பால்

காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டி - தங்கம் மற்றும் வெள்ளி வென்றது இந்தியா

Published On 2022-08-07 11:16 GMT   |   Update On 2022-08-07 12:05 GMT
  • காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் இன்று இந்தியா 2 பதக்கம் வென்றது.
  • இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.

இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News