காமன்வெல்த்-2022

ரோகித் டோகாஸ்

காமன்வெல்த் போட்டி - குத்துச்சண்டையில் இந்திய வீரர் ரோகித் டோகாஸ் பதக்கத்தை உறுதி செய்தார்

Published On 2022-08-04 20:13 GMT   |   Update On 2022-08-04 20:13 GMT
  • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
  • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Tags:    

Similar News