காமன்வெல்த்-2022

லக்‌ஷயா சென்

காமன்வெல்த் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published On 2022-07-31 22:15 GMT   |   Update On 2022-07-31 22:15 GMT
  • காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி நடைபெற்றது.
  • இதில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

முதல் சுற்றில் ஆடிய சும்த் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 21-11 என்ற கணக்கில் வென்றது.

2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-5, 21-6 என்ற கணக்கில் வென்றார்.

இதையடுத்து, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News