சினிமா
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு
பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது