சினிமா
ரஜினிகாந்த்

ரஜினி இ பாஸ் பெற்றாரா? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

Published On 2020-07-28 18:08 IST   |   Update On 2020-07-28 18:08:00 IST
ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர்.

  ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேசமயத்தில், ரஜினி இ பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

  இதன்காரணமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். 

 இந்நிலையில், ரஜினிகாந்த் இ பாஸ் எடுத்துதான் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்றார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அவர் இ பாஸ் பெற்றது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar News