சினிமா
சிவானி செந்தில் இயக்கத்தில் ராமச்சந்திரன், சிவகுமார், பாடினி குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டேக் டைவர்ஷன் படத்தின் முன்னோட்டம்.
சென்னை டூ பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்'. இப்படத்தை இயக்குனர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.
பேட்ட, சதுரங்கவேட்டை படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமார் நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் விஜய் தான் வில்லன். ஜார்ஜ் விஜய், பாலா ஜெ.சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜோஸ் பிராங்க்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். படத்தொகுப்பு - விது ஜீவா.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து இருக்கிறார். இப்
படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் வெளியிட்டார்கள்.