சினிமா
கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் முன்னோட்டம்.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்பலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் ஓமணப்பெண்ணே. இப்படத்தில் ஹரீஸ் கல்யாணும், பிரியா பவானி சங்கரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் கவனிக்கிறார்.
“இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும்” என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.
ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது: “படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.