சினிமா
ஜுவாலை படத்தின் போஸ்டர்

ஜுவாலை

Published On 2021-05-19 19:00 IST   |   Update On 2021-05-19 19:00:00 IST
மனுஷா தயாரிப்பில் ரஹ்மான் ஜிப்ரீல் ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம்.
75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க, ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். 

தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வளர்த்து நடித்து உள்ளார். 



கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ‘ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹ்மான் ஜிப்ரீல்.

ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார். 

Similar News