சினிமா
திடல்

திடல்

Published On 2021-01-30 17:00 IST   |   Update On 2021-01-30 17:00:00 IST
கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பி.பிரபாகரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திடல் படத்தின் முன்னோட்டம்.
கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் படம் திடல். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

இந்தத் 'திடல்', ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.
முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கம் படுத்துகிறார்கள். அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட, அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.

இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு, இசை ஸ்ரீசாய் தேவ். வி. எடிட்டிங் ரோஜர், கலை - சிவா, நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்து தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் பி.பிரபாகரன்.

Similar News