சினிமா

காட்சிப்பிழை

Published On 2018-12-25 05:39 GMT   |   Update On 2018-12-25 05:39 GMT
மகி இயக்கத்தில் புதுமுகங்கள் ஹரி ஷங்கர், மேகினா நாயகன், நாயகியாக அறிமுகமாகும் `காட்சிப்பிழை' படத்தின் முன்னோட்டம். #KaatchiPizhai
நித்தி கிரியேட்டர்ஸ் பி.ராஜசேகரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `காட்சிப்பிழை'.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர், மேகினா, ஜெய் சரண், தான்யா மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு - விக்னேஷ், படத்தொகுப்பு - ஆர்.ஷங்கர், இசை - யாநிதேஷ், கலை - சரவணன், நடனம் - ரமேஷ் ரெட்டி, பாடல் - பிரசன்னா, ஜெயமூர்த்தி, மானசி கமலாக்கா, சரிகா, தயாரிப்பாளர் - பி ராஜசேகரன், இணைத் தயாரிப்பு - ஆர்.எஸ்.சுமதி, ஆர்.எஸ்.நிதர்சனா, ஆர்.எஸ்.நித்திஷ், கதை திரைக்கதை, வசனம், இயக்கம் - மகி.



இந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் `Living Together' கலாச்சாரத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. 
படம் வருகிற டிசம்பர் 28-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #KaatchiPizhai

Tags:    

Similar News