சினிமா

பட்டினப்பாக்கம்

Published On 2016-11-16 17:17 GMT   |   Update On 2016-11-16 17:17 GMT
முள்ளமூட்டில் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் `பட்டினப் பாக்கம்'. இதில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
முள்ளமூட்டில் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் `பட்டினப் பாக்கம்'. இதில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாயாசிங், யோக் ஜே.பி., ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, மதுமிதா, சுவாமி நாதன் உள்பட பலர் நடிக் கிறார்கள்.

இசை-இஷான்தேவ், ஒளிப்பதிவு-ராணா, கலை-மோகனமகேந்திரன், எடிட்டிங்-அதுல் விஜய், திரைக்கதை, வசனம்-அரசு.வி, தயாரிப்பு-ரோகித் ராய் முல்லை மோட்டில். இயக்கம்-ஜெயதேவ். இவர் நடிகை பாவனாவின் சகோதரர்.
வித்தியாசமான கதை களத்தில்  `பட்டினப்பாக்கம்' உருவாகிறது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

பல ஆங்கிலப் படங்களை வினியோகம் செய்த எஸ்.பி.சினிமாஸ் இந்த படத்தின் விளம்பரம் மற்றும் வினியோக உரிமையை பெற்றுள்ளது.    

Similar News