சினிமா

நிசப்தம்

Published On 2016-09-01 17:47 IST   |   Update On 2016-09-01 17:47:00 IST
மிராக்கிள் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நிசப்தம்’. படம் குறித்த விவரங்களை கீழே பார்ப்போம்...
‘நிசப்தம்’ படத்தில் நாயகனாக அஜய் அறிமுகமாகிறார். ‘நாடோடிகள்’' அபிநயா, பேபி சாத்தன்யா, கிஷோர், கன்னட புகழ்  ராமகிருஷ்ணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஏஞ்சலின் டாவன்ஸி, பிராக்கிள் பிக்சர்ஸ் மூலம் க்ருப்பா கிதியோன், ஜெயரதி லாரன்ஸ், ப்ரச்சி சுக்லா, வளர்மதன்,பெருமாள் ஆகியோருடன் இணைந்து  தயாரித்துள்ளார்.

படம் முழுவதும் பெங்களூரின்  மையப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூரில்  வாழும் ஓர் தமிழ் குடும்பத்தை சுற்றிவரும் கதை. ஒளிப்பதிவு- எஸ்.ஜே.ஸ்டார், இசை- ஷான் ஜஸில், எடிட்டிங்- லாரன்ஸ் கிஷோர், கலை- ஜான்பிரிட்டோ.  

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். இயக்கம்- மைக்கேல் அருண். படம் பற்றி கூறிய அவர்.. “இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே’ என்ற பாடல் மறைந்த கவிஞர் நா.முத்துகுமாருக்கு மீண்டும் ஒரு தேசிய விருது பெறும் பாடலாக அமையும்.

படத்தின் இசை கோர்ப்பு பணிகளில் உலகில் சிறந்த இசை கலைஞர்களாகிய ‘செல்லோயிஸ்ட்’ ஜேக் சார்க்கி, கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் செல்லோ கலைஞர் டீனா குவா, மற்றும் செர்பியன் இசை கலைஞர் விளாடிஸ்வர் நடிஷானா போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர். நாயகி அபிநயா நடிப்பும், பேபி சாத்தன்யா ஏற்று நடித்துள்ள ‘பூமி’ என்கிற கதாபாத்திரமும் கண்டிப்பாக அனைவர் மனதையும் விட்டு நீங்காது இடம்பெறும்” என்றார்.

‘நிசப்தம்’ படத்தை அடுத்த மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Similar News