கிசுகிசு
null

கணவனை நம்பி மோசம் போன நடிகை

Published On 2023-06-21 13:27 IST   |   Update On 2023-06-21 13:58:00 IST

நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர், புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். நடிகையும் நல்லா இருக்கே... என்று சம்மதம் தெரிவித்தாராம். இதற்காக பல கோடி முதலீடு செய்தாராம் நடிகை.

ஆனால், எதிர்ப்பார்த்த படி அந்த தொழில் சூடு பிடிக்க வில்லையாம். இதனால், நொந்து போன நடிகை, கணவரை நம்பி பணத்தை முதலீடு செய்ய கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இருந்தாலும் நடிகையின் கணவர் பல ஐடியாக்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.

Tags:    

Similar News