சினிமா
கிசுகிசு

இயக்குனரை மிரட்டிய நடிகர்

Published On 2021-05-31 17:58 GMT   |   Update On 2021-05-31 17:58 GMT
பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவர், தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனரை மிரட்டி இருக்கிறாராம்.
மாஸ்டராக இருந்து டைரக்டராக மாறியவர் இந்தியில் இயக்கிய இரண்டெழுத்து படம், காலை வாரிவிட்டதாம். எதிர்பார்த்த வசூல் குறைந்ததாம். தயாரிப்பாளருக்கு இதனால் ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறதாம். அதை தயாரிப்பாளர் வேறுயாரிடமும் காட்டிக் கொள்ளவில்லையாம்.

அவருடைய கோபத்தை கதாநாயகன் மூலம் வெளிப் படுத்தினாராம். ‘‘இனிமேல் உன்னை மும்பை பக்கம் பார்க்கக் கூடாது’’ என்று அந்த இயக்குனரை கதாநாயகன் எச்சரித்து அனுப்பினாராம். நல்லவேளை...அடி விழவில்லை என்கிறார்களாம்.
Tags:    

Similar News