தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகையை ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டதற்கு, வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு பாடலுக்கு குத்தாட்டமா... வழியில்லாமல் ஒப்புக் கொண்ட நடிகை
பதிவு: நவம்பர் 19, 2019 22:20
கிசுகிசு
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகை, கதையின் நாயகி, கதாநாயகி என நடித்து வருகிறாராம். இந்நிலையில், கன்னடத்தில் வெளியான படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனமாடி இருந்தாராம். இதற்கு பிறகு நடிகையை ஒரு பாடலுக்கு நடனம் ஆட பலரும் கேட்டார்களாம். ஆனால், நடிகை மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில், தெலுங்கில் உச்ச நடிகர் நடித்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டார்களாம். உச்ச நடிகர் என்பதால் வழியில்லாமல் ஒப்புக் கொண்டு நடனமாடியுள்ளாராம். மீண்டும் பலர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்பார்கள் என்று நடிகை பயந்து வருகிறாராம்.