சினிமா
நடிக்க தடை போடுவியா?.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை
திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க தடை போடும் முயற்சியில் இறங்கிய காதல் கணவரை நடிகை எச்சரித்துள்ளாராம்.
மூன்றெழுத்து இளம்நடிகர் ஒருவர் தனது காதலியை அண்மையில் கரம் பிடித்தாராம். திருமணத்துக்கு பின் காதல் மனைவி நடிப்பதற்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் மனைவி மற்ற நடிகர்களுடன் டூயட் பாடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால், மனைவியை மீண்டும் நடிக்க அழைத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, ‘ அவர் இனிமேல் நடிக்க மாட்டார்....’ என சொல்லி வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விடுகிறாராம் அந்த நடிகர்.
கணவரே தன் படங்களுக்கு ஆப்பு வைத்து வரும் செய்தி அறிந்த நடிகை கடுப்பாகிவிட்டாராம். இதையடுத்து, சினிமாவில் நடிக்க தடை போட்டால் கோர்ட்டு படியேறி விடுவேன் என்று நடிகரை கடுமையாக எச்சரித்துள்ளார், அம்மணி. இதனால் அந்த நடிகர் பீதியில் கிடக்கிறாராம்.