சினிமா
கிசுகிசு

ஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை

Published On 2019-11-05 12:56 IST   |   Update On 2019-11-05 12:56:00 IST
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது நடிக்கும் புதிய படத்தில் ஜோடியை மாற்ற தகராறு செய்திருக்கிறாராம்.
‘தவ’ நடிகரும், ‘பதி’ நடிகரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அதில், ‘தவ’ நடிகருக்கு ஜோடி, ‘ஷ்கா.’ ‘பதி’ நடிகருக்கு ஜோடி, ‘அங்காடி’ நடிகை. இந்த ஜோடி ஒப்பந்தத்தில், அங்காடி நடிகைக்கு உடன்பாடு இல்லையாம். “என்னை தவ நடிகரின் ஜோடியாக போடுங்கள். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம்” என்கிறாராம், அங்காடி.

தவ நடிகரோ, “எனக்கு ஷ்காதான் பொருத்தமாக இருப்பார். எங்க ஜோடி, ராசியான ஜோடி என்று ஏற்கனவே ஒரு படத்தில் நிரூபித்து இருக்கிறோம்” என்று கூறுகிறாராம். “ஜோடியை மாற்றவில்லை என்றால் நடிக்க மாட்டேன்” என்று அங்காடி உறுதியாக சொல்லி விட்டாராம். இவர்கள் சண்டையில் படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் மாட்டிக்கொண்டு செய்வதறியாமல் விழிக்கிறார்களாம்!

Similar News