சினிமா

இசையமைப்பாளருடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்ட நடிகை!

Published On 2017-11-17 22:59 IST   |   Update On 2017-11-17 22:59:00 IST
கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் பல பட வாய்ப்புகளை பெற்றாராம். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபட்டும் வருகிறதாம்.
கன்னக்குழி நடிகை நடிக்க வந்த வேகத்தில் பல பட வாய்ப்புகளை பெற்றாராம். அதே வேகத்தில் அவருடைய பெயர் இசையமைப்பாளர் ஒருவருடன் சேர்ந்து அடிபட்டும் வருகிறதாம். காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறதாம். இதனால், நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.

ஒப்பந்தம் செய்த பிறகு நடிகை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் படம் பாதிக்குமே என்று இயக்குனர்கள் பயப்படுகிறார்களாம். இந்த காரணத்தால் நடிகைக்கு வாய்ப்புகள் வருவது இல்லையாம். வாய்ப்பு வராததன் காரணத்தை அறிந்த நடிகை அந்த இசையமைப்பாளருடன் நெருக்கத்தை குறைத்து வருகிறாராம்.

Similar News