சினிமா

மெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை மெர்சலாக்கிய நடிகை

Published On 2017-10-19 18:13 IST   |   Update On 2017-10-19 18:14:00 IST
தீபாவளிக்கு 3 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்தின் காட்சிக்கு இடையே நடிகை ஒருவர் ரசிகர்களை மெர்சலாக்கி இருக்கிறாராம்.
தீபாவளி பண்டிகையொட்டி மூன்று படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மெர்சலான படத்திற்கே ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதில் முதல் நாள் முதல் காட்சி தாமதமானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் நீண்ட நேரமாக திரையரங்கில் காத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட பின்னரும் படம் போடாமல் விளம்பரம் போடப்பட்டதால் ரசிகர்களின் கோபம் உச்சிக்கு சென்றது.

இந்நிலையில், பிரபல துணிக்கடை விளம்பரம் ஒன்று வந்ததும் அந்த விளம்பரத்தில் வந்த பிக் புகழ் நடிகையை பார்த்த உடன் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அத்துடன் நீண்ட நேரம் இருந்த அமைதி வெறியாக மாறி, பின்னர் அந்த நடிகையின் பெயரை சொல்லி ஆரவாரம் செய்யும் அளவுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.

திரையரங்கில் ஏற்பட்ட சத்தத்தால் காவலுக்காக காத்திருந்த போலீசாரும் படம் தொடங்கி பிரச்சனை ஏற்பட்டதாக நினைத்து உள்ளே வந்து ஏமாற்றமடைந்தனர். பின்னர் விளம்பரத்தில் வந்த நடிகைக்கு இந்த ஆர்ப்பாட்டமா என்று மெர்சலான ரசிகர்களை பார்த்து வியந்தனர்.

Similar News