சினிமா

நடிகையின் விபரீத ஆசை!

Published On 2017-10-04 23:22 IST   |   Update On 2017-10-04 23:22:00 IST
எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாராம்.
எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாராம். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் நடிகை!

இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறாராம். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தும் எந்தப் படமும் அமையவில்லையாம். அதற்குள் படத்தை இயக்க வந்துவிட்டார். எதற்கு இந்த விபரீத ஆசை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Similar News