சினிமா

நடிகராகும் மற்றொரு இயக்குனர்!

Published On 2016-09-05 16:32 IST   |   Update On 2016-09-05 16:32:00 IST
இயக்குனர்கள் எல்லாம் நடிகராகும் வரிசையில், தற்போது மற்றொரு இயக்குனரும் இணைந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாறியது அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல.. மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களுடைய அடுத்தடுத்த கதைகளில் நடிக்க மார்க்கெட்டில் உள்ள ஹீரோக்கள் நடிக்க மறுத்ததின் விளைவே, அவர்கள் ஹீரோவானதற்கு காரணம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அப்படித்தான் இப்போது ஒரு மற்றொரு தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரும் நடிகராக மாறவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நயன நடிகையின் காதலர்தான். இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்க நயன நடிகை முன்வந்துள்ள நிலையில், இப்படத்தில் எப்படியாவது பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்து தனது காதலரை ஏற்றிவிட்டு விடலாம் என்ற யோசனையில் இருந்த நயன நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏனென்றால், சிவமான அந்த இயக்குனரின் கதையில் நடிக்க எந்த முன்னணி நடிகரும் முன்வரவில்லையாம். விளைவு, தற்போது அந்த இயக்குனரே கதையின் நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். நயன நடிகைக்கும் அதுவே சரியென்று படுகிறதாம். ஹீரோயினாக நயன நடிகையே நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது.

Similar News