சினிமா

கண்மணி நடிகையை கடுப்பேற்றிய நடிகை!

Published On 2016-08-17 17:15 IST   |   Update On 2016-08-17 17:15:00 IST
கண்மணி நடிகையை பிரபல நடிகை ஒருவர் பெரியளவும் கடுப்பேற்றியிருக்கிறார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
சாமி நடிகர் இருவேடத்தில் நடித்துள்ள படத்தில் நயனமான நடிகையும், கண்மணி நடிகையும் நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இப்படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடந்தபோது இரண்டு பேரும் ஆஜராகவே இல்லை.

நயன நடிகை எப்போதும் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்ற பாலிசியை வைத்திருக்கிறார். ஆனால், கண்மணி நடிகை ஏன் கலந்துகொள்ள மறுக்கிறார் என்பது தெரியாமலே இருந்துவந்தது.

இதுகுறித்து விசாரிக்கையில், இப்படத்தின் விளம்பரங்களை எல்லாம் நயன நடிகையை பிரதானமாக வைத்துத்தான் பிரபலப்படுத்தி வருகிறார்களாம். கண்மணி நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லையாம்.

படத்தின் புரோமோஷன்களுக்கே வராத நடிகையை மட்டுமே வைத்து அவர்கள் விளம்பரப்படுத்தும்போது நான் மட்டும ஏன் புரோமேஷன்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே கண்மணி நடிகை படத்தின் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லையாம்.

நயன நடிகையை வைத்து படக்குழுவினர் விளம்பரப்படுத்தினாலும், படம் வெளிவந்த பிறகு என்னுடைய நடிப்புதான் பெரிதும் பேசப்படும் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கண்மணி நடிகை பேசிக் கொள்கிறாராம். 

Similar News