null
ஒருவேளை இருக்குமோ? STR 50 படத்தில் ரிஸ்க் எடுக்கும் சிம்பு
- சிம்பு அவரது 50- வது திரைப்படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார்.
- இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
சிம்பு அவரது 50- வது திரைப்படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார்.
அந்த வகையில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரவீன் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை மூர்த்தி மேற்கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தக் லைஃப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது STR 50 திரைப்படத்தில் இரு வேடங்களி நடிக்கிறார். மேலும் அதில் ஒரு கதாப்பாத்திரம் பெண்ணியல் சாயல் அதிகம் இருக்கும் கதப்பாத்திரம். அந்த கதாப்பாத்திரத்திற்காக நான் கமல் சாரிடம் கலந்துரையாடியுள்ளேன் என கூறியுள்ளார்.