சினிமா செய்திகள்

ரசிகர்களை விழாவில் அனுமதிக்க முடியாததை நினைத்து வருந்துகிறோம் - மன்னிப்பு கேட்ட தனுஷ் நற்பணி மன்றம்

Published On 2025-09-16 16:19 IST   |   Update On 2025-09-16 16:19:00 IST
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவிற்கு தனுஷ் ரசிகர்கள் கடலென திரண்டனர். சிலருக்கு அனுமதி சீட்டு இருந்துல் பலரால் அரங்கம் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் பல ரசிகர்கள் கடுப்பாகி இணையத்தில் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் இதனை கருத்தில் கருதி தனுஷ் நற்பணி மன்றம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் "பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தாய்மார்கள், குழந்தைகள், ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்!

14.09.2025 ஞாயிறு அன்று சிறப்பாக நடந்து முடிந்த தலைவர் தனுஷ் அவர்கள் நடித்து, இயக்கி டான் பிக்சர்ஸ் தயாரிப்பான நமது "இட்லி கடை" இசை வெளியீட்டு விழா - விற்கு வந்த அனைவருக்கும் பாராட்டும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், சில தவிர்க்கமுடியாத காரணத்தினாலும், பாதுகாப்பையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு சில அன்பான ரசிகர்களை விழாவில் அனுமதிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறோம் என்பதை சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொள்கிறோம். அதன் பொருட்டு தங்களது வருத்தம் முற்றிலும் நியாயமானது என்பதை முழுமையாக ஏற்கிறோம்.தாங்களும் இந்த விழாவில் கலந்திருந்தால் விழா, மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதே உண்மை. இதை போன்ற நெருக்கடிகளையும், வருத்தங்களையும் வருங்காலத்தில் சரிசெய்து தங்களுக்கு சிறு குறையும், மன வருத்தமும் ஏற்படாத வகையில் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே விழாவில் கலந்துக்கொள்ள முடியாத அன்பு உள்ளங்களின் வேதனை எங்களுக்கும் பல மடங்கு உள்ளது என்பதை தெரிவிக்கிறோம். இனி வருங்காலங்களில் வரும் விழாக்களை தங்களுடன் சேர்ந்து இன்னும் சிறப்பாக பயணிப்போம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!

Tags:    

Similar News