சினிமா செய்திகள்
திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு..! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்
- என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம்.
- இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன்.
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.இதையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம். என்னுடைய முதல் படமான செல்லமே 2004 இல் வெளியானது. இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன். 21 ஆண்டுகாலம் என்பது என்னுடைய வெற்றி அல்ல, உங்களின் வெற்றி. நீங்கள் என் படத்தை தியேட்டரில் பார்க்க கொடுக்கும் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன்.