சினிமா செய்திகள்

தைவானில் டொவினோவின் 2018- மலையாள சினிமாவிற்கு கிடைத்த அங்கீகாரம்

Published On 2025-04-21 13:09 IST   |   Update On 2025-04-21 13:09:00 IST
  • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் டொவினோ தாமஸ் முக்கியமானவர்.
  • மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் டொவினோ தாமஸ் முக்கியமானவர். இவர் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இவர் நடித்த `ஐடெண்ட்டி' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ARM மற்றும் அன்வேஷிப்பின் கண்டேதும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான `2018' திரைப்படத்தை தைவானில் நடைப்பெற்ற தி கோல்டன் ஹார்ஸ் ஃபெண்டாஸ்டிக் பிலிம் ஃபெஸ்டிவல் {TGHFF} திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் கேரளாவில் நடந்த வெள்ள பெருக்கில் மக்கள் எவ்வாறு இருந்தனர் ஒருவருக்கொருவர் எவ்வாறு காப்பாற்றும் குணமுடையவர்களாக இருந்தனர் என்பதை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்ட படமாகும். 2018 திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த திரைப்படங்களுள் ஒன்றாகும்.

திரைப்படவிழாவில் படத்தை பார்த்த பிறகு மக்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி படத்திற்கு மரியாதை செலுத்தினர். இத்திரைப்பட விழாவில் படத்தின் கதாநாயகானான டொவினோ கலந்துக்கொண்டார். அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு மலையாள சினிமாவின் ஒரு வெற்றியாகும்.

Tags:    

Similar News