சினிமா செய்திகள்

'தக் லைஃப்' தடை நீக்கம் : கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவதா? - கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Published On 2025-06-17 13:03 IST   |   Update On 2025-06-17 13:03:00 IST
  • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
  • இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது . இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்து வெளியிடவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.

மேலும் திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தில் வேலை அல்ல. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்? என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி.

Tags:    

Similar News