சினிமா செய்திகள்
null

ராம் சரண் படத்தை நிராகரித்ததற்கு இதுதான் காரணம் - சுவாசிகா

Published On 2025-08-25 15:30 IST   |   Update On 2025-08-25 15:32:00 IST
  • தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
  • படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.

தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ராம் சரணின் அம்மா கதாப்பாத்திரத்திற்கு லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகாவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சுவாசிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ராம் சரணின் தாய் கதாப்பாத்திரத்தில் அதற்குள் நடிக்க என்ன அவசரம். எனக்கு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தோணவில்லை." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News