சினிமா செய்திகள்

எலக்சன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது

Published On 2024-05-11 12:59 IST   |   Update On 2024-05-11 12:59:00 IST
  • உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார்.
  • திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் நேற்று வெளியாகியது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News