சினிமா செய்திகள்

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி நாளை வெளியீடு

Published On 2025-06-24 10:47 IST   |   Update On 2025-06-24 10:47:00 IST
  • மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
  • மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.

மார்கன் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள்.

விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த கிரைம் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முதல் 6 நிமிடங்களை படக்குழு நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இதேப்போல் விஜய் ஆண்டனி நடித்து வெளியான எமன் படத்திற்கும் இப்படி படத்தின் முதல் 6 நிமிடங்கள் வெளியிட்டது படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பை தூண்டியது. அதேப்போல் இப்படத்திற்கும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News