நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம்- தந்த்ரா விமர்சனம்
- அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள்.
- காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் அன்பு மயில்சாமி நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். tantra, tantra review, தந்த்ரா, தந்த்ரா விமர்சனம்
அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள். அந்த ஜோடியின் திருமணப் பேச்சு வார்த்தையின்போது குறுக்கே வருகிற, துஷ்டசக்தியை சுமந்திருக்கும் ஒரு பெண், 'பிருந்தா சாக வேண்டியவள், சீக்கிரமே சாகப் போகிறாள்' என்று சொல்லி அதிர்ச்சி தருகிறாள்.
அவள் ஏன் அப்படி சொன்னாள் என்பது பற்றி பிருந்தாவின் அப்பா, அம்மாவிடம் விசாரிக்கும்போது பிருந்தா அவர்களுடைய மகளே இல்லை என்பதும், அவளுடைய தந்தை செய்த பாவச் செயலுக்காக ஒரு சக்தி பிருந்தாவை பழி வாங்கக் காத்திருப்பதும் தெரியவருகிறது.
இறுதியில் பிருந்தா கிருஷ்ணன் யாருடைய மகள், பழிவாங்கக் காத்திருக்கும் சக்தியிடமிருந்து பிருந்தாவை காப்பாற்ற முடிந்ததா? காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அன்பு மயில்சாமி, மாமாவுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டும் இருக்கும் கதாபாத்திரம். காதலியை துஷ்ட சக்தியிடம் இருந்து காப்பாற்றும் காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். பிருந்தா கிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதல் உணர்வை, பய உணர்வை போதுமான அளவில் வெளிப்படுத்துகிறார்.
மனித உயிர்களைப் பலியிட்டு புதையலை அடையத் துடிக்கும் மந்திரவாதியாக வருகிற நிகாரிகாவின் நடிப்பு, இன்னொரு மந்திரவாதியாக வருகிற ஜாக்கும் மிரட்டுகிறார்கள். நிழல்கள் ரவி, சசிகுமார் சுப்ரமணியன் ஜாவா சுந்தரேசன், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இயக்கம்
ஒரு புதையல், அதை அடையத் துடிக்கும் மந்திரவாதி என ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களை கலந்து அமானுஷ்ய திரில்லர் அனுபவம் தந்திருக்கிறார் இயக்குநர் வேதமணி. 'நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம்' என்பதை சொல்ல வந்திருக்கிறார். திரைக்கதை வலுவில்லாமல் செல்வதால் ரசிக்க முடியவில்லை.
இசை
கணேஷ் சந்திரசேகர் இசை ஹாரர், திரில்லர் கதைக்கேற்றவாறு பயணித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஹாசிப் எம் இஸ்மாயில் ஒளிப்பதிவு சுமார் ரகம்.