சினிமா செய்திகள்

யோகிபாபு

மீண்டும் கதாநாயகனாகும் யோகி பாபு..

Published On 2022-06-16 15:48 IST   |   Update On 2022-06-16 15:48:00 IST
  • இயக்குனர் ஜான்சன் தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கியுள்ளார்.
  • இந்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.

"ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வலம் வரும் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், கேபிஒய் வினோத், கேபிஒய் பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மெடிக்கல் மிராக்கல்

அரசியல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "மெடிக்கல் மிராக்கல்" என்று படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை ஏ1 புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பதன் மூலம் இயக்குனர் ஜான்சன்.கே தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ரோகேஷ் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. "மெடிக்கல் மிராக்கல்" படத்தின் படப்பிடிப்பினை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News