சினிமா செய்திகள்

'VNRT trio' துவக்க விழா

நிதின் -ராஷ்மிகா படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த சிரஞ்சீவி

Update: 2023-03-25 11:22 GMT
  • இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'VNRT trio'.
  • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இயக்குனர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'VNRT trio'. இந்த படத்தில் நிதின், ராஷ்மிகா மந்தனா, ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.


இப்படம் குறித்த அறிவிப்பை சுவாரஸ்யமான வீடியோ ஒன்றின் மூலம் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மூலம் இந்த படம் பொழுதுபோக்கு மற்றும் சாகம் நிறைந்ததாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். மேலும், இப்படத்தின் துவக்க விழாவின் முதல் காட்சிக்கு நடிகர் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குனர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார்.


கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா முவரின் கூட்டணியில் வெளியான 'பீஷ்மா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News