சினிமா செய்திகள்

அன்று உதவித்தொகை.. இன்று இலவச பாடசாலை.. அதிரடி காட்டும் விஜய்

Published On 2023-07-12 14:03 IST   |   Update On 2023-07-12 14:03:00 IST
  • விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் தொடர்ந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
  • சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

இந்நிலையில், மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரவு நேர பாடசாலைக்கு தேவையான இடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அதற்கான வாடகை, ஆசிரியர் தேர்வு போன்ற அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நான்கு இடங்களுக்கு மேல் இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News