சினிமா செய்திகள்

விஜய்- புஸ்ஸி ஆனந்த்

வருமானத்தில் 2 சதவீதம் ஏழைகளுக்கு உதவ விஜய் அறிவுரை.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு

Published On 2023-06-17 10:01 GMT   |   Update On 2023-06-17 10:01 GMT
  • நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
  • இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.



விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News