சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா

லைகர் பட தோல்வியால் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏற்பட்ட சிக்கல்

Published On 2022-09-06 15:56 IST   |   Update On 2022-09-06 15:56:00 IST
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.
  • லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


லைகர்

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. லைகர் திரைப்படத்தைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜனகணமன என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


லைகர் படக்குழு

சார்மி கவுர், வம்சி பைட்டிப்பள்ளி, மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், லைகர் படத்தின் தோல்வியின் காரணமாக ஜனகணமன படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இதனால் பூரி ஜெகன்நாத்தும், விஜய் தேவரகொண்டாவும் பேச்சுவார்த்தை நடத்தி இப்படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News