சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன்

null

விக்னேஷ் சிவன் வெளியிட்ட வாணி போஜன் பட போஸ்டர்

Update: 2022-07-05 12:20 GMT
  • அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேசினோ.
  • இதில் வாணி போஜன், மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சியாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் மார்க் ஜோயன் இயக்கத்தில் வாணி போஜன் நடித்துள்ள படம் கேசினோ. இந்த படத்தில் மதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கேசினோ

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News